ஸ்ரீந்ருஸிம்ஹ ப்ரியா பயிலரங்கச்செய்திகள்

Sri Ahobila Math Adarsh Sanskrit Mahavidyalaya

பதஞ்சலி யோகசூத்திரம் பயிலரங்கம்

இப்பவும் ஸ்ரீவில்லிவலம் ஸ்ரீமதழகியசிங்கர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, ப்ரக்ருதம் ஸ்ரீமதழகியசிங்கரின் 71வது திருநக்ஷத்ர ஸந்தர்ப்பத்தில், ஸர்வதேச யோகாதினத்தை முன்னிட்டு, புதுதில்லி கேந்த்ரீய ஸம்ஸ்க்ருத விச்வவித்யாலயத்தின் நியமனத்துடன், ஸ்ரீகார்யம் ஸ்வாமி, ப்ரபந்தக ஸமிதி தலைவர், ஸ்ரீராமாநுஜம் ஸ்வாமி, ஸ்ரீமாலோலன் அறக்கட்டளையின் கார்யதர்சி ஸ்ரீநிவாஸன் ஸ்வாமி இவர்களின் மார்க தர்சனத்தில், ஜூன் மாதம் 6ம் தேதி முதல் 15ம் தேதி வரை நமது டிஜிடல் கேம்பஸ் மூலமாக ஆன்லைனில் ஸ்ரீபாதஞ்ஜல யோகஸூத்ரத்தின் முதல் இரண்டு பாதங்களில் பயிலரங்கம் நடைபெற்றது.

பின்னர் அடுத்த இரண்டு பாதங்களின் பயிலரங்கம் ஆகஸ்டு 16 முதல் 25ம் தேதி வரை சிறப்பாக நடைபெற்றது. பயிலரங்கத்தில் நமது கல்லூரி வேதாந்த அத்யாபகர்கள் ஸ்ரீ.உ.வே. முகுந்தன் மற்றும் ஸ்ரீஉ.வே. ஸ்ரீகாந்த் ஸ்வாமிகள் பாடம் நடத்தினார்கள்.

இதில் பங்குபெற்ற அனைவருக்கும் ஈ-ப்ரமாணபத்ரம் வழங்கப்பட்டது. இதில் அனைத்து அத்யாபகர்களும் பங்குபெற்றனர்.

Sri Ahobila Math Adarsh Sanskrit Mahavidyalaya

ஸம்ஸ்க்ருத ஸப்தாஹ கார்யக்ரமம்

நமது கல்லூரியில் “ஸம்ஸ்க்ருத ஸப்தாஹம்” என்னும் கார்யக்ரமம், ப்ரதிவருடம் போல் இவ்வருடமும் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சி 29.08.2026 முதல் 03.09.2026 வரை நடைபெற்றது.

தொடக்க விழாவில் பிஹார் ஜே. என். ஆதர்ச ஸம்ஸ்க்ருத மஹாவித்யாலயாவின் பேராசிரியர் ஸ்ரீ ரமேஷ்குமார் ஜா மற்றும் ஸம்ஸ்க்ருத பாரதீ, பிஹார் மாநிலத்தின் செயலர் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டு, மாணவர்களுக்கு ஸம்ஸ்க்ருத பாஷையின் பெருமையையும் சிறப்பையும் எடுத்துரைத்தனர்.

மேலும், இந்நிகழ்ச்சிக்கு நமது கல்லூரியின் நிர்வாகக் குழுத் தலைவர் பேராசிரியர் சத்யநாராயணாசார்யா ஸ்வாமி, தற்போது துணைவேந்தர், உத்கல் பல்கலைக்கழகம், பூரி, ஒடிசா மாநிலம், அவர்கள் ஆசி வழங்கினார்கள்.

ஸப்தாஹ கார்யக்ரமத்தின் நிறைவு விழாவில், நமது கல்லூரி செயலர் ஸ்ரீமான் டீ.கே. ஸ்ரீநிவாஸன் ஸ்வாமி மற்றும் நமது கல்லூரியின் முன்னாள் முதல்வர் ஸ்ரீ.உ.வே. வரதகோபாலகிருஷ்ணன் ஸ்வாமி ஆகியோர் மாணவர்களுக்கு அறிவுரை வழங்கி, பரிசுகளை வழங்கி சிறப்பித்தனர்.

Sri Ahobila Math Adarsh Sanskrit Mahavidyalaya

ஸம்ஸக்ருத ஸம்பாஷண சிபிரம் பயிற்சி வகுப்பு

இப்பவும் மாணவர்களின் ஸம்ஸ்க்ருத பேசும் திறனை வளர்ப்பதற்காக, ஸ்ரீ ஸம்ஸ்க்ருத பாரதீ, தமிழ்நாடு மூலமாக ஸம்ஸ்க்ருத ஸம்பாஷண சிபிரம் வகுப்புக்கள் 6.9.2026 முதல் 12.09.2026 வரை நமது கலாசாலையில் நடத்தப்பட்டது.

அந்த வகுப்பை நடத்துவதற்காக ஸம்ஸ்க்ருத பாரதீ, உத்தர தமிழ்நாடு கார்யகர்த்தாக்கள் ஸ்ரீமான் ராதாக்ருஷ்ணன் மற்றும் ஸ்ரீமதி மாயா ராதாக்ருஷ்ணன் அவர்கள் வந்திருந்து தங்கி சிறப்பாக நடத்தினார்கள்.

அதில் அவர்களின் பயிற்சியின் மூலம் மாணவர்களே நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்கள். மாணவர்கள் சிறப்பாகப் பங்குபெற்று தனது பேசும் திறனை வளர்த்துக்கொண்டனர்.

இந்த வகுப்பை நடத்த அனுமதி அளித்த ஸ்ரீமான் டீ.கே. ஸ்ரீநிவாஸன் ஸ்வாமிக்கு தன்யவாதங்களை தெரிவித்துக்கொள்கிறோம்.